Monday, November 15, 2010

கொக்கிப் புழுக்கள் -Hook Worm

‘கொக்கிப் புழுக்கள்’ மனிதன் உடம்புக்குள் மேற்கொள்ளும் பயணம் அதிர்ச்சியளிப்பது என்றாலும், ஆர்வமூட்டக்கூடியதாகும். ஒட்டுண்ணிகளான கொக்கிப்புழுக்கள், மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளின் சிறுகுடல்களைத் தங்களின் இருப்பிடமாக்கிக் கொள்கின்றன.
அவற்றின் முட்டைகள் குறிப்பிட்ட நபரின் மலம் வழியாக வெளியேறுகின்றன. ஈரப்பதமும் வெதுவெதுப்பும் கூடிய மண்ணில் அவை பொரிக்கின்றன. நிலப்பகுதிக்கு வரும் ஸார்வா, சரியான வாய்ப்புக்காக காத்திருக்கின்றது. வெறும் காலோடு செல்பவர்கள் குறிப்பாக குழந்தைகள் அவற்றுக்கு நல்ல இலக்காகிவிடுகின்றனர். பாதத்தை துளைத்து உடம்புக்குள் புகுந்துவிடுகிறது லார்வா.
உடம்புக்குள் புகுந்ததும் லார்வாவானது ரத்தக் குழாய்க்குள் நுழைகிறது. ரத்த ஓட்டத்தில் எடுத்துச் செல்லப்படும் லார்வா, ‘பல்மனரி ஆர்ட்டரி’ மூலம் நுரையீரலை அடைகிறது.
பின்னர் அந்த ஒட்டுண்ணி, மூச்சுக்குழாய் அல்லது. ‘ட்ரக்கியா’வுக்குள் செல்கிறது. அங்கிருந்து அது உணவுக்குழாய்க்குப் பயணம் மேற்கொள்கிறது. வயிற்றின் வழியாக அது தனது இறுதி இலக்கான சிறுகுடலை அடைகிறது.
அது குடல் சுவரில் ஒட்டிக்கொள்கிறது. கொக்கி போன்ற அமைப்பினால் அது குடல் சுவரைத் துளைக்கிறது. அவ்வாறு துளையிடப்படுவதால், குறிப்பிட்ட நபர் தினசரி 0.8 சி.சி. இரத்தத்தை இழப்பர். அடுத்து, செரிமானத்தின் போது உணவுக்குழாயை அடையும் பெரும்பாலான சத்துகளை கொக்கிப்புழு உறிஞ்ச ஆரம்பிக்கிறது.
கொக்கிப்புழு தற்போது முதிர்ந்த நிலையை அடைகிறது. குடலுக்குள் கொக்கிப்புழுக்கள் பெருகினால் ‘கொக்கிப்புழு நோய்’ என்ற தீவிரமான உடல்நலப் பாதிப்பு ஏற்படுகிறது.
வெப்பமண்டல நாடுகளில் கொக்கிப்புழு நோய் பரவலாகக் காணப்படுகிறது. இந்த நேயா¡ல் பாதிக்கப்பட்டவருக்கு கடுமையான ரத்தசோகை ஏற்படுகிறது. அவரைப் பலவீனமாக்கி, எளிதில் பிற நோய்கள் தொற்றும் நிலையை ஏற்படுத்துகிறது. கொக்கிப்புழு பாதிப்பின் முதல் அடையாளம், கறுப்பான, தார் நிற மலக்கழிவாகும். கொக்கிப்புழு பாதிப்புஏற்படாமல் தடுப்பதற்கான ஒரே வழி, காலணி அணிவதும் சரியான சுகாதாரத்தைப் பேணுவதும்தான்.


எளிதான விளக்கத்திற்கு வீடியோ தொகுப்பு கீழே-



சாதாரணமாக நமது குழந்தைகள் செருப்பு அணிந்து செல்வதை விரும்பமாட்டார்கள். குடுகுடுவென வெறுங்காலோடு தெருமணலில் இறங்கி ஒடிவிடுவார்கள்.அவர்களுக்கு இந்த வீடியோ படத்தை காண்பியுங்கள. அதனால் இனி வெறுங்காலோடு தெருவில் இறங்க யோசிப்பார்கள்.மருத்துவ தொழில் சார்ந்த எச்சரிக்கையாக இதனை பதிவிடுகின்றேன்.பதிவினை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


Saturday, July 24, 2010

அடங்காதவன்-அவுட்- லைன் கலர் புக்

எல்லா அங்கிள்களுக்கும் வணக்கம். கொஞ்ச நாட்களாக கொஞசம் பிஸியாக தனியாக விளையாட்டுகளை விளையாடிட்டே இருந்துட்டேன். இப்போ மீண்டும் நான் விளையாடி பார்த்த விளையாட்டுக்களை உங்களுடன் விளையாட வரேன்.
சிறுவர்களுக்கான இந்த சாப்ட்வேர் அவுட் லைனில் படங்களுக்கு பலவித வண்ணங்களை விதவிதமாக நிரப்புவதாகும். இதில் 15 க்கும் மேற்பட்ட அவுட்லைன் புகைப்படங்கள் உள்ளது.இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
இதில் வலப்புறம் மேலே உள்ள கையுடன் உள்ள பிரஷ் கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.



இதில் கீழ்புறம் பெயிண்ட் பக்கெட் முதல் பிரஷ்கள் வரை இருக்கு்ம். அழி்ப்பதற்கு ரப்பரும் உண்டு. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதன் இடதுபுறம் பலவித வண்ணங்கள் இருக்கும். தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் வண்ணங்கள் தேவையானாலு்ம் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யும் சமயம் நமக்கு மேலும் வண்ணங்கள் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இந்த சாப்ட்வேர் மூலம் நான் பெயிண்ட் ்செய்த படம் கீழே-
நாம் செய்த பெயிண்டிங்கை நாம் தனியே சேமிக்கவும் முடியும். பிரிண்ட் எடுக்கவும் முடியும். பயன்படுத்திப்பாருங்கள்.அடுத்த கேமில் பார்க்கலாம்.
அன்புடன்.
அடங்காதவன்.

Monday, February 22, 2010

அடங்காதவன்:-வில் - அம்பு விளையாட்டு

அங்கிள் மற்றும் ஆன்டிக்களுக்கு வணக்கம். இன்று எனது பிறந்தநாள். தங்கள் அன்பான ஆசிர்வாதம் வேண்டி....
அன்புடன்.
அடங்காதவன்.

இன்றைய பதிவில் வித்தியாசமான விளையாட்டைகாணலாம். இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

நீங்கள் இந்த சின்ன சாப்ட்வேரை டவுண்லோடு செய்து உங்கள் கணிணியில் நிறுவவும்.
இதில் வில் அம்புடன் என்னைப்போல் ஒரு சிறுவன் வருவான். வண்ண வண்ண பலூன் கள் பறந்து வரும்.கையில் உள்ள வில் கொண்டு அந்த பலூன்களை ஒவ்வொன்றாக உடைக்க வேண்டும். இதில் ஒவ்வொரு லெவலாக உயர்ந்துகொண்டே செல்லும். நல்ல பொழுது போகும். நீங்கள் விளையாடி பார்த்துவிட்டு உங்கள் மகனுக்கும் சொல்லிக்கொடுங்கள். ஒ.கே.வா...

அப்படியே மறக்காமல் ஒட்டுப்போட்டுவிட்டு போங்கள். நன்றி....

அப்புறம் அங்கிள். ஒரு முக்கியமான விஷேஷம். எனது அப்பாவை உங்களுக்கு நன்கு தெரியும். அவர் வலைத்தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

அன்புடன் ,

அடங்காதவன்.

web counter

Friday, January 15, 2010

உங்கள் ஞாபகசக்தி எப்படி?



அனைவருக்கும் வணக்கம். லீவு விட்டதில் நானும்
விளையாடிட்டே இருந்துட்டேன். சாரி....
இன்னிக்கி புதிய விளையாட்டை பார்க்கலாம்.
கண்டுபிடி கண்டுபிடிடா...கண்ணாலா கண்டபடி
கண்டுபிடிடா...(அங்கிள் இது கட்டிபிடி கட்டிபிடி
பாட்டு இல்ல...கண்டுபிடி...கண்டுபிடி பாட்டு..எப்பிடி..?)

இதை நீங்க டவுண்லோடு செய்ய இங்குள்ள
பட்டனை அழுத்துங்க.
இது நம்ப ஞாபகசத்தியை வெளிப்படுத்தற விளையாட்டு.
இதில் 60 பெட்டிகள் இருக்கும். ஒரு பெட்டியில
இருக்கின்ற டிசைனை வேற பெட்டியில இருந்து
கண்டுபிடிக்கணும். நீங்க சரியா கண்டு பிடிச்சிட்டா
அந்த பெட்டி மறைந்திடும். உங்களுக்கு ஸ்கோர் ஏறும்.

நீங்க எவ்வளவு நேரத்தில முடிக்கிறீங்களோ அவ்வளவு
பாயிண்ட். எல்லாதையும் முடிச்சிட்டா உங்களுக்கு இந்த
பெட்டி தகவலோடு வரும்.
உங்க னதோஸ்துங்க.உங்க அண்ணா - அக்காங்க -தம்பி-
தங்கச்சிங்களும் விளையாடலாம். அவங்களுக்கும்
ஸ்கோர் உண்டு.

உங்க டாடி டென்ஷனா இருந்தா
அவரையும் விளையாட சொல்லுங்க...டென்ஷன் குறை
ய வாய்ப்பிருக்கு...
சரி சரி...மறக்காம உங்க நண்பருக்கு சொல்லுங்க...
ஒட்டையும் குத்திடுங்க....

வரட்டா....
BYE....BYE....

அடங்காதவன்.

எங்கூட விளையாடின அங்கிள்கள்:-
web counter