Monday, November 15, 2010

கொக்கிப் புழுக்கள் -Hook Worm

‘கொக்கிப் புழுக்கள்’ மனிதன் உடம்புக்குள் மேற்கொள்ளும் பயணம் அதிர்ச்சியளிப்பது என்றாலும், ஆர்வமூட்டக்கூடியதாகும். ஒட்டுண்ணிகளான கொக்கிப்புழுக்கள், மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளின் சிறுகுடல்களைத் தங்களின் இருப்பிடமாக்கிக் கொள்கின்றன.
அவற்றின் முட்டைகள் குறிப்பிட்ட நபரின் மலம் வழியாக வெளியேறுகின்றன. ஈரப்பதமும் வெதுவெதுப்பும் கூடிய மண்ணில் அவை பொரிக்கின்றன. நிலப்பகுதிக்கு வரும் ஸார்வா, சரியான வாய்ப்புக்காக காத்திருக்கின்றது. வெறும் காலோடு செல்பவர்கள் குறிப்பாக குழந்தைகள் அவற்றுக்கு நல்ல இலக்காகிவிடுகின்றனர். பாதத்தை துளைத்து உடம்புக்குள் புகுந்துவிடுகிறது லார்வா.
உடம்புக்குள் புகுந்ததும் லார்வாவானது ரத்தக் குழாய்க்குள் நுழைகிறது. ரத்த ஓட்டத்தில் எடுத்துச் செல்லப்படும் லார்வா, ‘பல்மனரி ஆர்ட்டரி’ மூலம் நுரையீரலை அடைகிறது.
பின்னர் அந்த ஒட்டுண்ணி, மூச்சுக்குழாய் அல்லது. ‘ட்ரக்கியா’வுக்குள் செல்கிறது. அங்கிருந்து அது உணவுக்குழாய்க்குப் பயணம் மேற்கொள்கிறது. வயிற்றின் வழியாக அது தனது இறுதி இலக்கான சிறுகுடலை அடைகிறது.
அது குடல் சுவரில் ஒட்டிக்கொள்கிறது. கொக்கி போன்ற அமைப்பினால் அது குடல் சுவரைத் துளைக்கிறது. அவ்வாறு துளையிடப்படுவதால், குறிப்பிட்ட நபர் தினசரி 0.8 சி.சி. இரத்தத்தை இழப்பர். அடுத்து, செரிமானத்தின் போது உணவுக்குழாயை அடையும் பெரும்பாலான சத்துகளை கொக்கிப்புழு உறிஞ்ச ஆரம்பிக்கிறது.
கொக்கிப்புழு தற்போது முதிர்ந்த நிலையை அடைகிறது. குடலுக்குள் கொக்கிப்புழுக்கள் பெருகினால் ‘கொக்கிப்புழு நோய்’ என்ற தீவிரமான உடல்நலப் பாதிப்பு ஏற்படுகிறது.
வெப்பமண்டல நாடுகளில் கொக்கிப்புழு நோய் பரவலாகக் காணப்படுகிறது. இந்த நேயா¡ல் பாதிக்கப்பட்டவருக்கு கடுமையான ரத்தசோகை ஏற்படுகிறது. அவரைப் பலவீனமாக்கி, எளிதில் பிற நோய்கள் தொற்றும் நிலையை ஏற்படுத்துகிறது. கொக்கிப்புழு பாதிப்பின் முதல் அடையாளம், கறுப்பான, தார் நிற மலக்கழிவாகும். கொக்கிப்புழு பாதிப்புஏற்படாமல் தடுப்பதற்கான ஒரே வழி, காலணி அணிவதும் சரியான சுகாதாரத்தைப் பேணுவதும்தான்.


எளிதான விளக்கத்திற்கு வீடியோ தொகுப்பு கீழே-



சாதாரணமாக நமது குழந்தைகள் செருப்பு அணிந்து செல்வதை விரும்பமாட்டார்கள். குடுகுடுவென வெறுங்காலோடு தெருமணலில் இறங்கி ஒடிவிடுவார்கள்.அவர்களுக்கு இந்த வீடியோ படத்தை காண்பியுங்கள. அதனால் இனி வெறுங்காலோடு தெருவில் இறங்க யோசிப்பார்கள்.மருத்துவ தொழில் சார்ந்த எச்சரிக்கையாக இதனை பதிவிடுகின்றேன்.பதிவினை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


No comments:

Post a Comment